விலகியது விலகியதாகவே
இருக்கட்டும் விட்டுவிடுங்கள்..
மீண்டும் வந்தால் யார் விரிசல்கள் யாருடையது என்ற போர்கள் எழலாம்!
பேசாமல் போன சொற்கள் பேசாமலே தீர்ந்து போகட்டும்..
காலம் தாழ்ந்து வந்த வார்த்தைகள் வெறும் நீராவிகள்
நீண்ட நேரம் நிற்காது!
சொல்லாமல் கொள்ளாமல் போனவர்கள் உண்மையில்
தொலையவில்லை ஒளிந்து கொண்டனர்..
தேட வேண்டாம் அவர்களை
வேண்டுமெனில் வந்துவிடுவார்கள்!