வியாழன் ரிஷபத்தில் இருந்தால் நல்லசுகம் வாழ்வில் அமையும். இனிமையாக பேசுவார்.
பொதுமக்களிடையே செல்வாக்கு இருக்கும். தியாக குணம் இருக்கும்.
குரு 9ம் வீட்டோனுடன் இணைந்தோ 9ம் வீட்டோனை பார்க்கும் போது தியானம், யோகத்தில் ஈடுபாடும்,
தந்தை பெரும் பணக்காரராகவும் அறப்பணியில் நாட்டமும், ஞானவானாக இருப்பார்.
குருவானவர் நீசம்பெற்று லக்னத்தில் ராகு இருந்தால் அந்த ஜாதகர் எப்போதும் கவலைப்படுபவராக இருப்பார்.
குரு 5ல், 5ம் அதிபதி பலம்பெற்ற சுபர்பார்வை பெற்றால் மகன் உண்டு.