பிரச்சினை இதுதான் -யார் வாழ வேண்டும்?
ஒரு நாட்டை வாழவைப்பதும் பிற நாடுகளை அழிய வைப்பதும் எது?
வாழ்க்கைப் போரில் வெற்றி பெற வேண்டுவது எது
அன்பா, பகையா? போகமா, துறவா ? ஜடமா உணர்வா?
வரலாறு காணாத அந்தக் காலத்தில் நமது முன்னோர்கள் என்ன எண்ணினார்களோ
அவ்வாறே நாமும் சிந்திக்கிறோம்.
எந்தப் பரம்பரையும் தலைநீட்ட முடியாத அந்தத் தொலைநாளில்,
மேன்மை மிக்கவர்களாகிய நமது முன்னோர்கள்
இந்தப் பிரச்சினையில் தங்கள் பக்கத்தை எடுத்துக்கொண்டு,
உலகிற்கு சவால் விட்டுள்ளனர்