:1) ஏகாங்க நமஸ்காரம் :
தலை மட்டும் குனிந்து வணங்குதல்
2) துவிதாங்க நமஸ்காரம் :
இரு கைகளையும் தலைக்கு மேல் குவித்து வணங்குதல்
3) பஞ்சாங்க நமஸ்காரம் :
( பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் )
இரு கைகள் இரு முழந்தாள்கள் சிரசு ஆகிய ஐந்து அங்கங்கள் பூமியில் பதிய வணங்குதல்
4) சாஷ்டாங்க நமஸ்காரம் :
இரு கைகள் இரு முழந்தாள்கள் சிரசு மார்பு ஆகிய ஆறு அங்கங்கள் பூமியில் பதிய வணங்குதல்
5) அஷ்டாங்க நமஸ்காரம் :
இரு கைகள் இரு முழந்தாள்கள் இரு செவிகள் சிரசு மார்பு என எட்டு அங்கங்கள் பூமியில் பதிய வணங்குதல்.