சூரிய சந்திராதி சுர லக்ஷணம் ..
இடாசலாம நிஸ்வாச சோம மண்டல கோசரா
பித்ருயான மிதிஞேயம் வாமமாசிரித்யதிஷ்டதி
தக்ஷிணே பிங்களா நாடி வஹ்ணி மண்டலகோசரா
தேவயானமிதிஞேயம் புண்யகர்மானுகாரணி.
வலது பக்கத்து நாசிகை துவாரமாய்வரும் உஸ்வாச நிஸ்வாச ரூபமாய் இருக்கும் காற்றை
பிங்களை என்றும், சூரியனென்றும், தேவயானமென்றும், புனராவிருத்தி ரஹிதமென்றும்
புண்ணிய கருமங்கள் செய்யும்படியானதென்றும் பன்னிரெண்டு அங்குலம் பாயுமென்றும் அறியவும்.