4 – மிடத்தை பாபர் பார்த்து, 4 – க்குரியவர், 5, 9 – லிருந்து, 5 – க்குரியவர் பார்த்தால்,
பூர்வீக சொத்துக்கள் மாறி புதிய பொலிவுடன் திகழும்.
மாதுர் வகை சொத்து அழியும். பிதுர் வகை சொத்து விர்த்தி அடையும்.
நிலம், வீடு, வாகனங்கள் கடின உழைப்பின் பேரில் கிட்டும்.
4 – க்குரியவர், பாதகம் பெற்று, 4 – இல் பாவர் பாதகாதிபதி சாரம் பெற்று,
சனி, செவ்வாயின் தொடர்பை பெற்றால் பிரயாணங்களில் எச்சரிக்கை தேவை.
தாயினுடைய அனுசரணை குறையும். கூட்டுத் தொழிலில் பிரிவினை ஏற்படும்.
மனைவியால் மனநிம்மதி கெடும். மேற்படி கிரக திசாபுத்தி காலங்களில்,
வாகன விபத்தால் எதிர்பாராத அசம்பாவிதத்தால் அங்கத்தில் குறை எற்படலாம்.
4 – க்குரியவர் பலம் பெற்று, லக்கினாதிபதியும் பலம் பெற்று 4 – க்குரியவரின் தொடர்பு பெற்று
செவ்வாய்க்கு 5, 9 – ல் இருந்தால் மேற்படி கிரக திசாபுத்தி காலங்களில்
நல்ல யோகத்தை உண்டாக்கும். பூமி, சொத்து, வீடு வசதிகள் உண்டு