உருவம் இருக்கும் எதனுள்ளும் அதனை இயக்கும்
உருவமில்லா சக்தி ஒன்று இருந்தே தீரும் என்பதே அது
நாம் உருவம் கொண்டிருக்கிறோம்
நாம் இயங்க நம்முள் உருவமற்ற காற்று தேவைப்படுகிறது.
அது போல தான் எல்லாவற்றிற்கும்
அண்டங்களாலும் அணுவானாலும் இது தான் விதி
இதனையே பண்டைய சித்தர்கள் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் இருக்கிறது என்று கண்டு உணர்ந்து கூறினார்கள்.
மனிதன் செயலில் கற்பனையெனும் பாகம் நம்மை வளமாக்கவும் செய்யும், நாசமாக்கவும் செய்யும்
அது என்ன செய்யும், எப்படி செய்யும் என்பதை முதலில் தெரிந்து கொண்டால்
எது எதற்கு அதை எப்படி செய்விக்க வேண்டும் என்பது நமக்கு தெரிந்துவிடும்
அப்படி தெரிந்து கொண்டபின்
நம் தேவைக்கு, ஆசைக்கு தகுந்தபடி அதை உபயோகப்படுத்தி
நாம் நமக்கு வேண்டியதை அடையலாம்.