நாம் மனதின் ஒரு செயலான கற்பனை எனும் விஷயத்தை பற்றி நாம் நன்கு தெரிந்து கொண்டால்
அதை செயல்படுத்தும் சூட்சுமத்தை அறிந்து கொண்டால்
நம் வாழ்வில் நாம் துன்பம், சோகம், தோல்வி, விரக்தி போன்றவற்றை அடியோடு ஒழித்துவிட்டு
இன்பம், மகிழ்ச்சி, வெற்றி, உற்சாகம் எனும் நிலையினை இறக்கும் வரை அனுபவிக்கலாம்
கற்பனையின் திறன் எப்படிப்பட்டதென்றால்
அதால் கடவுளையே உருவாக்க முடியும்
இன்னும் ஒரு படி மேலேபோய் யோசித்தால் அதனைக் கொண்டு நாம் கடவுளாகவே ஆக முடியும்.
நான் வார்த்தைகளில் இதை சொல்லி விட்டேன்
இதனுடைய அர்த்தம் படிப்பவர்களின் மனநிலைக்கு ஏற்பட வெளிபடும்
. அதுதான் நிஜம்
இதை புரிந்து கொள்ளும் முன்
அடிப்படை யான சில விஷயங்களை நாம் புரிந்து கொள்வது முக்கியம்