இங்கு வறுமை வாழ்க்கையின் ஒரு பெரிய சாபமாக இருக்கிறது,
அங்கே ஆடம்பரக் களைப்பு அந்த இனத்தின் சாபமாக உள்ளது.
இங்கே மனிதர்கள் தற்கொலையை நாடுகிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு உண்ண எதுவும்இல்லை.
அங்கே உணவு குவிந்து கிடப்பதால் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
தீமை எல்லா இடத்திலும் இருக்கிறது.
அது தீராத வாத நோய் போன்றது.
அங்கிருந்து துரத்துங்கள், வேறு எங்காவது போகும்
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் என்று ஒவ்வோரிடமாகத் துரத்தலாம், அவ்வளவுதான்.
ஆனால் குழந்தைகளே, தீமையை ஒழிப்பதுதான் உண்மையான வழி