இந்த சொசைட்டிகளுள் சில, தங்களோடு சேர்ந்து கொள்ளுமாறு என்னைப் பயமுறுத்துகிறார்களோ என்று தோன்றுகிறது.
இது ஒரு விபரீத முயற்சி.
பதினான்கு வருடங்கள் பட்டினியை நேருக்கு நேராகச் சந்தித்த ஒருவனை,
அடுத்த வேளைக்கான உணவும் படுக்க இடமும் எங்கே கிடைக்கும் என்று
தெரியாத ஒருவனை அவ்வளவு சுலபமாகப் பயமுறுத்திவிட முடியாது.
பூஜ்யத்திற்குக் கீழே முப்பது டிகிரி என்று வெப்பமானி காட்டுகின்ற பிரதேசத்தில்,
ஏறக்குறைய உடைகளே இல்லாமலும், அடுத்தவேளை உணவு
எங்கிருந்து வரும் என்று தெரியாமலும்
வாழத் துணிந்த ஒருவனை
இந்தியாவில் பயமுறுத்துவது என்பது அவ்வளவு சுலபமானதல்ல.