இப்போது சென்னையிலுள்ள சீர்திருத்தச் சங்கங்களுக்கு வருகிறேன்.
அவர்கள் என்னிடம் கனிவு காட்டினார்கள்,
அன்போடும் பேசினார்கள். தங்களுக்கும் வங்காள சீர்திருத்தவாதிகளுக்கும் வேறுபாடு உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினார்கள்.
நானும் மனமுவந்து அதனை ஏற்றுக் கொள்கிறேன்.
சென்னை மிக அழகிய நிலையில் உள்ளது என்று நான் அடிக்கடிச் சொல்வது
உங்களுள் பலருக்கு நினைவிருக்கும் ஒன்றைச் செய்வது உடனே அதற்கு எதிராக இன்னொன்றைச் செய்வது-
வங்கச் சீர்திருத்தவாதிகளின் இந்த விளையாட்டை சென்னை இன்னும் பின்பற்றவில்லை.
இங்கு எல்லாவற்றிலும் நிதானமான அதேவேளையில் உறுதியான முன்னேற்றம் காணப்படுகிறது.
இங்கே வளர்ச்சி உள்ளது, எதிர்செயல் இல்லை.
வங்காளத்தில் பல விஷயங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு ஒரு மறுமலர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது.
ஆனால்சென்னையில் மறுமலர்ச்சி இல்லை; வளர்ச்சி, இயற்கையான வளர்ச்சி காணப்படுகிறது.
எனவே இந்த இரண்டு இனங்களுக்கும் இடையே இருப்பதாகச் சீர்திருத்தவாதிகள் சுட்டிக் காட்டுகின்ற
வேறுபாடுகளை நான் முற்றிலுமாக ஏற்றுக்கொள்கிறேன்;
ஆனால் இவர்கள் புரிந்து கொள்ள முடியாத வேறுபாடும் ஒன்று உள்ளது.