பல வியாதிகள் மலச்சிக்களிலிருந்து ஆரம்பிப்பது போலவே,
எந்த ஜுர வியாதிகள் வந்தாலும் மலத்தைக் கட்டி விடுகிறது.
இதை அறிந்தே வைத்தியர்கள்,
மருந்துகளில் பேதியாகிற வஸ்துக்களை சேர்க்கிறார்கள். குடலில் மலம் தங்கவே விஷம் உண்டாகிறது.
இது உடலெல்லாம் பரவுகிறது. இதைச் சுய – விஷ – வெறி ( AUTO – INTOXICATION ) என்கிறார்கள்.
உடல் தனக்குத்தானே விஷத்தைக் கக்கிக் கொள்கிறது.
இந்த அபாயகரமான நிலை குடலில்தான் ஏற்படுகிறது.
அதாவது, பெருங் குடலினுடையதே இப்பொறுப்பு,
இக்குடல் உபயோகமற்ற பொருள்களையும் ஜீரணிக்காதவைகளையும்,
வெளியில் தள்ள வேண்டும். பல காரணங்களால், இது சரியாக நடைபெறாமல் தடைபடுகிறது.