மலம்சிக்கக் கொள்வாய் பிணிகள் பலகாண்
மலமகல அன்றன்றே பண்பு.
பெ ரு ங் கு ட ல்
மலம் –
பெருங்குடலின் பெரிய பிணி
மலச்சிக்கல் மலம் என்றாலே அருவருப்பு உண்டாகும்.
இதைக் கண்டவுடன் பலர் வாந்திகூடச் செய்து விடுவார்கள்.
பார்க்கவும், தொடவும், வெறுப்பை விளைவிக்கக் கூடியது மட்டுமல்ல,
இதை சரியான முறையில் விலக்காவிட்டால் மிகுந்த அபாயத்தை உண்டாக்கும்.
ஊரில் சேரும் மலம் ஊரையே ஒக்கும், வயிற்றிலே சேரும் மலம் ஆளையே கொன்றுவிடும்.
இவ்வளவு கொடிய வஸ்து மனிதன் குடலில் உற்பத்தியாகிறது!
அதில் தங்குகிறது! அங்கிருந்து வெளியே தள்ளப்படுகிறது.