எல்லோருக்கும் சேவகனாக இருப்பதன் மூலம் தான்
ஓர் இந்து தன்னை உயர்த்திக்கொள்ள வழிதேடுகிறான்.
பாமரர்களைக் கைதூக்கிவிட இப்படித்தான் இந்துக்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர,
எந்த வெளி நாட்டுச் செல்வாக்கையும் எதிர்பார்த்து அல்ல,
மேலை நாகரீகத்தின் விளைவைப் பாருங்கள்.
இருபது ஆண்டுகள் அதன் ஆதிக்கத்தில் வாழ்ந்ததால்
தன் சொந்த நண்பனையே அன்னிய நாட்டில் பட்டினிபோட விரும்பிய
அந்த மனிதரின் நினைவுதான் எனக்கு வருகிறது.
அவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்?
நண்பன் பிரபலமாகி விட்டான்,
தான் பணம் சம்பாதிப்பதற்குக் குறுக்கே நிற்கிறான்,
அவ்வளவுதான் காரணம்.
அதே நேரத்தில், வைதீக இந்து சமயம் என்ன செய்கிறது என்பதற்கு,
சொந்த நாட்டில் என் குருதேவரின் வாழ்க்கை ஓர் உதாரணம்.
நமது சீர்திருத்தவாதிகளுள் யாராவது தாழ்ந்த குலத்தினனுக்கும் சேவை செய்யத் தயாராக இருந்து,
அந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டட்டும்;
அப்போது நான் அவர்களின் காலடியில் அமர்ந்து கற்றுக் கொள்கிறேன்,
அதற்கு முன்னால் அல்ல.
ஒரு துளி செயல்
இருபதாயிரம் வெற்றுப் பேச்சுக்களை விடச் சிறந்தது.