எனது ஜாதி ஒதுக்கப்படுமானால் இன்றைய இந்திய நாகரீகத்தில் என்ன மிஞ்சும்?
வங்காளத்தை எடுத்துக்கொள்ளுங்கள்;
இந்தியாவின் மகத்தான தத்துவ அறிஞர், மகத்தான கவிஞர்,
மகத்தான வரலாற்று அறிஞர், மகத்தான தொல் பொருள் ஆய்வாளர்,
மகத்தான சமய போதகர் என்று ஒவ்வொருவரும் என் ஜாதியைச் சேர்ந்தவர்களே.
இக்கால விஞ்ஞானிகளுள் மகத்தான விஞ்ஞானி ஒருவரை
இந்தியாவிற்கு அளித்துள்ளதும் என் ரத்தமே.
உண்மையைத் திரித்துக் கூறுகின்ற இவர்கள் நம் வரலாற்றைப் பற்றிச் சிறிதாவது அறிந்திருக்க வேண்டும் ;
பிரசமணர் க்ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று ஜாதியினருமே சன்னியாசத்திற்குச்
சம உரிமை படைத்தவர்கள் என்பதை படித்திருக்க வேண்டும் ;
மூன்று ஜாதியினரும் வேதம் படிக்கச் சம உரிமை பெற்றவர்கள்.