இன்னும் ஒரு வார்த்தை ,
சமுகச் சீர்த்திருத்தவாதிகளின் பத்திரிகை ஒன்றில் ,என்னைச் சூத்திரன் என்று எழுதி,
சன்னியாசி ஆவதற்கு எனக்கு என்ன உரிமையிருக்கிறது என்று சவால் விடப்பட்டிருந்ததை நான் படித்தேன்.
அதற்கு என் பதில் ; ஒவ்வொரு பிராமணனும் ,யமாய தர்மராஜாய சித்ரகுப்தாய வை நம என்று ஓதிக்கொண்டு
யாருடைய திருவடிகளில் மலர்களை அர்ப்பிக்கிறானோ,
தூய க்ஷத்திரியர்கள் யாருடைய வழியில் தோன்றியவர்களோ,
அவரது பரம்பரையில் தோன்றியவன் நான் .
நீங்கள் உங்கள் புராணங்களையும் சாஸ்திரங்களையும் நம்புபவர்களானால் ,
என் ஜாதி கடந்த காலத்தில் செய்திருக்கும் பல சேவைகளுடன்,
பாதி இந்தியாவைப் பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தும் இருக்கிறது என்பதைச்
சீர்திருத்தவாதிகள் என்று அழைக்கப்படுகின்ற இவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்,