செவ்வாய் ஆட்சி உச்சம் வீட்டில் இருப்பது ருசிகர யோகம். இது போன்ற யோகம் அமைவது
காவல்துறை, இராணுவம், கப்பல் துறைக்கு அதிகம் பயன்படும்.
செவ்வாயும், சுக்கிரனும் 1,4,7,10ல் கூடி இருக்குமாயின்
இல்லாளை இழந்தவராய் அல்லது விவாகரத்து செய்தவராய் இருப்பர்.
செவ்வாய் லக்னத்தில் இருக்கப் பிறந்தவர்
தன் பந்துதுக்களிடத்தில் எப்போதும் விரோதித்துக் கொள்வர்.
செவ்வாய் கடகத்தில் நீச்சம்பெற்று அதில் லக்னம் அமையப்பெற்றவர்கள்
படிப்பு குறைவாக இருப்பினும், சிறு தொழில் செய்து ஜீவிப்பர்.