செவ்வாய் கும்பத்தில் இருக்கப்பெற்ற ஜாதகர் செல்வம் குறையும், கவலைகள் சூழும்,
கஷ்ட ஜீவனம் செய்ய வேண்டி வரும். சூதாட்டத்தில் பொருள் இழக்க நேரிடும்.
செவ்வாய் தசையில் சனி புத்தியில் பகைவர்களின் கொடுமை, துன்பம், துயரம் அதிகரிக்கும்.
செவ்வாய்க்கும் 4ம் வீட்டுக்கும் தொடர்பு இருந்து செவ்வாய் பலம் பெற்றால் பொறியியல் கல்வி ஏற்படும்.
செவ்வாய்க்கும் 4ம் வீட்டுக்கும் புதன், சனி கூடி இருப்பின் இன்சினீயரிங் கல்வி பெறக்கூடும்.
செவ்வாய், குரு பலமாக இருந்து வித்யாஸ்தானத்தோடும் தொடர்பு இருப்பின்
சட்டம் பயின்று வழக்கறிஞராகி நீதிபதியாக வாய்ப்பு உண்டாகும்.