செவ்வாய் எங்கிருந்தாலும், கடகம்,சிம்மம் ஆகிய லக்ன\ ராசிகளில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷமில்லை.
செவ்வாயுடன் குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் சேர்ந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
செவ்வாய் பலமுடன் விளங்கினால் சக்தி, முருகன் பூஜை வாயிலாக சித்தியை பெறுவார்.
செவ்வாயும் 12ம் வீட்டோனும் கூடி பலம் இழந்தால்சகோதரரிடையே சக்கரவு ஏற்படும்.
செவ்வாயுடன் 12ம் வீட்டோன் கூடி இருந்தால் சிறைப்பீதி ஏற்படக்கூடும்.
செவ்வாய், புதனுடன் சேர்ந்தால் மருந்துகள் சம்பந்தப்பட்ட கடைகளிலும் மருத்துவராகவும், திறமை ஏற்படும்.
செவ்வாய் 10 வீட்டோடு தொடர்பு இருப்பின் இராணுவம், போலீஸ் பணி ஏற்படும்.