நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று
அதாவது முன் பிறவியின் தொடர்ச்சியே இப்பிறவி என்பது
இது புரிந்து கொண்டால் நாம் அனுபவிக்கும்
அல்லது நாம் சந்திக்கும் சிக்கல்கள் துயரங்கள் தோல்விகள் அனைத்தும்
நம்மாளேயே உருவாக்கப்பட்ட தென்று, தெரிய வரும்
அப்படி தெரியவரும் போது நமக்குள் தெளிவு வரும்
அந்த தெளிவு இறைவனைப் பற்றிய சிந்தனைக்கு அழைத்துச் செல்லும்
அதில் பயணப்படும் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள்
நமக்கு ஏற்பட்டிருக்கும் துயரங்கள் சிக்கல்கள், தோல்விகள் எதனால் ஏற்பட்டது என்றும்
அதை எப்படி கடக்கலாம் என்பதை உணர்த்தும்
முன்பே சொன்னது போல்
இறை நம்பிக்கையே தன் நம்பிக்கை
அந்த தன் நம்பிக்கை நம்மை எல்லா துயரிலும் இருந்து வெளியேற்றும்
எல்லா தோல்விகளையும், வெற்றிகளாக மாற்றும்
மனிதனுக்கு இது நடக்கும் நடக்காது என்று சொல்லவே முடியாது
காரணம்
வாழ்க்கை பக்கத்திற்க்கு பக்கம் ஏராளமான புதிர்களை கொண்ட புத்தகம்
நாம் தான் புதிர்களை விடுவிக்கவேண்டும்.