ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு சூழ்நிலையில் அவை வெளிப்பட்டு
பிறர் நம்மை புகழும் படி செய்திருக்கலாம் என்பது நமக்கு தெரியும்
ஒரு விஷயத்தில் தவறு நேர்ந்து விட்டால்
அதை சரி செய்யவோ
அல்லது
அந்த தவறு மீண்டும் நடக்காமல் இருக்கவோ
மேற் சொல்லிய விஷயங்கள் பயன்படும்.
தன்னுடைய குண நலன்களை ஆராய்ந்து பார்க்கும்
வித்தையை அறியாதவர்களுக்கு
தான் என்ன செய்கிறோம் தான் என்ன செய்ய வேண்டும் என்று அறியாமல் போகலாம்.
அப்படிப்பட்டவர்கள் மேற் சொன்ன முறைகளை கையாண்டு
சுய சிந்தனையை மேற்கொண்டு
தன்னுடைய கவனத்தை தன்னுடைய திறமைகளை கண்டுணர்வதில் செலுத்தி
பின் அந்த திறமைகளை சரியான படி வளர்த்து செயல்படும் போது
எல்லோரும் புகழும் நிலைக்கு வரலாம்
புகழ் எல்லோருக்கும் சந்தோஷம் தருவதுதானே.