வசதியற்ற,யாருக்கும் தெரியாத, நண்பர்களோ அறிமுகமோ இல்லாத ஒரு சன்னியாசியாக,
கடல் கடந்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்றேன்.
அங்கே சென்று தியாசபிக் சொசைட்டியின் தலைவரைச் சந்தித்தேன்.
அவர் ஓர் அமெரிக்கர், இந்தியாவை நேசிப்பவர்.
ஒரு வேளை அவர் அங்குள்ள யாருக்காவது ஓர் அறிமுகக் கடிதம் தருவார் என எண்ணினேன்.
அவரோ என்னிடம், நீங்கள் எங்கள் சொசைட்டியில் சேர்வீர்களா? என்று கேட்டார்.
முடியாது, எப்படி முடியும்? உங்கள் கொள்கைகளுள் பெரும்பாலானவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை என்றேன் நான்
இதைக் கேட்டதும் அவர்
பொறுக்க வேண்டும்,
என்னால் உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.
இது எனக்குப் பாதை வகுத்துத் தரும் வழியல்லவே!