தாராளமயமான சிந்தனைகள், மாறுபட்ட கருத்துக்களிடமும் பெருந்தன்மை என்றெல்லாம் பெரிய பேச்சுக்களைக் கேட்கிறோம்.
மிக நல்லது. நிஜ வாழ்க்கையிலோ, இந்தக் தாராளம், பெருந்தன்மை எல்லாம்
ஒருவன் சொல்வதை அப்படியே நம்பும் வரைதான்.
சிறிது மாறுபட்டால் போதும் பெருந்தன்மை பறந்துவிடும்
அன்பு மறைந்துவிடும். இன்னும் சிலர் இருக்கிறார்கள்,
அவர்களுக்கென்று சுயநலப் பாதைகளும் உள்ளன.
அவர்களின் பாதையில் ஏதாவது தடை குறுக்கிட்டால் போதும்,
அவர்களின் இதயங்கள் எரியும், வெறுப்பு கொப்புளித்து வெளிப்படும்,
என்ன செய்வது என்றே அவர்களுக்குத் தெரியாது.