தன் நம்பிக்கை என்பது
தனது திறமைகளை பற்றி அதீதமான தவறான மதிப்பீடு செய்வதல்ல
அல்லது போலியான தற்பெருமையோடு அலைவதல்ல,
அவரவரின் உள்ளார்ந்த ஆற்றலின் மீது உள்ள மன திடம் தன்நம்பிக்கை ஆகும்.
இன்னுமொரு விஷயம் அவரவரின் திறமையில் கிடைக்கும் பயன் கூட தன் நம்பிக்கையை வளர்க்கும்
அனால் அது நீண்ட காலம் அல்லது எல்லா சூழ்நிலைகளிலும் கைகொடுக்கும் என்று சொல்ல முடியாது
ஏமாந்தால் இது தற்பெருமை உள்ளவராகவும், ஆணவகாரராகவும் மாற்றிவிட வாய்ப்பு உண்டு
ஆனால் உள்ளார்ந்த ஆற்றலின் மீதானதின் மீது உண்டாகும் தன் நம்பிக்கை
எக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் கைகொடுக்கும்
அது பெருமை பீத்தாது ஆணவம் கொள்ளாது.