பராலிஸிஸ் ( PARALYSIS ) ஊசி எற்றுதலால் சொல்ப குணம் பெற்றவர் சிலர்.
இவர் பிற்காலத்தில் இந்நோயிலேயே உயிரிழப்பது உலக அனுபவம்.
போலியோ அல்லது குழந்தை வாதத்திற்கு இன்னும் மருந்து நினைக்கப்படவில்லை.
குஷ்டத்தில் சிகிச்சை எல்லாம் பிறருக்குப் பரவாமல் தடுப்பதிலேயே நிற்கின்றது.
குஷ்டத் தழும்பில் ஏற்றும் எண்ணெய் முதலிய மருந்து ஊசிகளெல்லாம் நிறத்தை மாற்றும்,
இடத்தில் மயிர் முளைக்கச் செய்யலாம்.
ஆனால் உணர்ச்சி வரச்செய்ய சக்தியற்றவை.
குணமாகிவிட்டதென்று மனப்பால் குடித்துச் சென்றவர்,
மனம் கசிந்து, இக்கடுநோய் வட்டியும், முதலுமாகச் சேர்ந்து
வளருவதை பயங்கரத்துடன் காண்கிறார்கள்.