உங்களிடம் நீங்கள் போராடுங்கள்
அதில் வெற்றி பெறுங்கள்
அந்த வெற்றி நீடித்த வெற்றி நிலைத்த வெற்றி
பிறருடன் போராடி கிடைக்கும் வெற்றி நிலைத்த வெற்றி அல்ல
கால மாற்றத்தால் அந்த வெற்றி இடம் மாறிக் கொண்டே இருக்கும்.
அப்படி வெற்றி இடம் மாறும் போது
நீங்கள் உங்களையும் அறியாமல் எல்லாவற்றையும் இழந்ததாக நினைத்து துன்பப்படுவீர்கள்
அதனால்
போராட்டம் என்பது உங்களிடம் இருக்கட்டும்
அப்போது கிடைக்கும் வெற்றியும்
எப்போதும் உங்களிடம் இருக்கும்.