நம் கடந்த கால நிலைக்கும் நம் தற்கால நிலைக்கும் உள்ள வளர்ச்சியை
அல்லது வீழ்ச்சியை ஒப்பிட்டு உங்களை சுய மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்
அந்த சுய மதிப்பீடு உங்களை மேலும் சரி செய்ய பயன்படும்.
உங்களுக்குள்ள பிரச்சனைகளை முதலில் கண்டுணர பழகுங்கள்
அந்த பிரச்சனைகள் முழுவதும் உங்களுடையது
அதாவது நீங்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது தான் என்று அறியுங்கள்.
அறிந்த பின் உங்கள் திறமைகளை மதிப்பீடு செய்யுங்கள்
அந்த திறமையை கொண்டு
உங்களின் உள்ளார்ந்த பிரச்சனைகளை சரி செய்து கொண்டு
இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழுங்கள்.