4 – ல் குரு, சனி சேர்க்கை பெற்று 6, 8 – க்குடையவரின் தொடர்பை பெற்றால்,
காது, வாய், கால்கள், மர்மஸ்தானங்கள் இவைகளில் பாதிப்புக்கள் காணும்.
மத்திமவயதிற்கு மேல் இவ்வகை குற்றங்கள் அதிகரிக்கும்.
4 – லில் சூரியன், சனி, செவ்வாய், புதன், சேர்க்கை பெற்று 6, 8 – க்குரியவரின் தொடர்பு பெற்றால்,
வீடு சுகமற்றவன், இவன் சொத்துக்கள் அடமானத்தில் மூழ்கும்.
எந்த வீடும் விருத்தியாகாது.
4 – க்குரியவர், சந்திரன் 3, 6, 8 – லிருந்தால் செல்வம் நிலைக்காது.
தாய் நலம் குணங்களை பெறாதவன்.
தந்தையால் ஆபத்துக்ளைப் பெற்றவன்.
ஒரு நிரந்தரமான இடத்திலிருக்கமாட்டான்.