4 – இல், சனி, புதன், செவ்வாய், இருந்து 4 – க்குரியவரின் தொடர்பு பெற்றால்
இன பந்துக்கள் அற்றவன், பாவ காரியங்களில் நாட்டம் உள்ளவன்.
மனைவிக்கு துர்தேவதாபயம், பீதி , மன நோய் ஏற்படலாம்.
உடல் உறவை விரும்பாத மனைவியாவாள்.
4 – க்குரியவர், சுக்கிரன் கூடி 10 – லிருப்பின் எதிர்பாராத சொத்துக்கள் சேரும்.
தாய் வழியால் லாபம் உண்டு. திசாபுத்தி காலங்களில் மேல்மட்ட ஆட்களின் உதவி கிடைத்து
தொழில் ரீதியான தொடர்பு பெற்று வாகன வசதியும் நல்ல அழகான வீடும் அமையும்.
4 – க்குரியவர், 1, 7 – லிருப்பின் அனேக வித்தைகள் அறிவான்.
பிதாவகை சொத்தை அழிப்பான். சபையில் ஊமைபோல் இருப்பான்.
மனைவியால் சுகம் பெறுவான்.
தான் நினைத்ததை நடத்திக் காட்டுவான்.