இனி நோயாளிகள் இச் சிகிச்சையை மேற்கொள்ளும் முன்,
கவனிக்க வேண்டிய பொதுத் திட்டங்களைக் கூறுவோம்.
ஊசி, உள் மருந்து, வெளி மருந்து, அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம்
இவை எல்லாவற்றையும் தீர்த்த பிறகு தான் யோக சிகிச்சைக்குத் திரும்புகிறார்கள்.
இதற்குள் உடலின் இயற்கைச் சக்தி எல்லாம் மிகக்குன்றி விடுகின்றன.
உட்செலுத்திய மருந்துகள், பல கோளாறுகளை விளைவித்து விடுகின்றன.
மற்ற வைத்திய பரீட்சையில் முக்கியமான காலம், வருடக் கணக்கில் வீணாகி விடுகிறது.
படுத்தபடுக்கையாக நோயாளி ஆகிவிட்டால்,
யோக சிகிச்சை தானே செய்து கொள்ளுவதும்,
நிபுணர் பயிற்சி அளிப்பதும் சிரமமாகிவிடும்.
சில சமயம் ஆயுள் கடைக் காலமாகி
சிகிச்சை இயலாதென்றே கூறிவிட நேருகிறது.