‘யோக சிகிச்சை’ என்ற பெயர் இந்த நூலில் கண்ட இம்முறைக்கு இடுவானேன்?
பிணியை ஒழிப்பதற்கு, ஈசன் அளித்துள்ள யோக சம்பந்தமான எல்லா அம்சங்களையும்,
என் நூதன அனுபவ ஆராய்ச்சி சாஸ்திர வழியில் பிணைக்கப்பட்டிருப்பதால் ‘
சுந்தர யோக சிகிச்சை ‘ என்று பெயரிடப்பட்டுள்ளது.
நான் ஒருவனே கையாளக் கூடியது என்று பொருளல்ல,
யாவரும் இதில் தேர்ச்சி பெற்று மானிட உலகிற்குப் பணியாற்றலாம்.
தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்டு,
தான் அடைந்த சுகத்தைப் பிறருக்குப் பரவச் செய்யலாம்.
இந்த “ சுந்தரயோக சிகிச்சை “யில் உபயோகப்படும் முறைகள்
1 யோகாசனம், 2, பிராணயாமம், 3. உடற்பயிற்சி, 4. உணவு,
5 ஒழுக்கம், 6. உடலை அமுத்திவிடல் ( MASSAGE ), 7. பிராண சக்தி அளித்தல் ( PASSING PERSONAL MAGNETISM ) 8. தன்மொழி, மனச்சோதனை
( AUTO SUGGESTION PAYCHLATRY OR PSYCHO – ANALYSIS )
9 துதி சிகிச்சை (DIVINE HEALING).
முதல் நான்கு திட்டங்கள், ஒவ்வொரு நோயின் சிகிச்சையிலும் பிணைக்கப்பட்டுள்ளன.
கடைசி நான்கு திட்டங்களைத் தனிப்பட்ட முறையில் கவனிப்போம்.