சிவன் கோவில்களில் இறைவனின் சன்னதிக்கு எதிராக நந்தியம் பெருமான் வாகனமாக வீற்றிருப்பார்.
அனைத்து சிவாலயங்களிலும் இது போன்ற அமைப்பில் தான் நந்தியை தரிசனம் செய்ய முடியும்.
ஆனால்
திருச்சியில் உள்ள உண்ணக்கொண்டான் மலைமீது உள்ள
உஜ்ஜீவநாதர் கோவிலில் குழந்தை வடிவத்தில் நந்தியம் பெருமானை தரிசனம் செய்யலாம்.
இந்த ஆலயத்தில் ஆதிபராசக்தியே ஜோஷ்டாதேவியாக அருள்பாலிப்பதாக ஐதீகம்.
இந்த அம்பிகையின் கையில் நந்திகேஸ்வரர், குழந்தை வடிவத்தில் வீற்றிருக்கிறார்.