பெரியவர்கள் பெருந் தியாகங்களைச் செய்கிறார்கள்.
அதன் விளைவாக வரும்நன்மைகளை மனித குலம் பெற்று அனுபவிக்கிறது.
இந்த உண்மையை நீ உலக வரலாறு முழுவதிலும் காணலாம்.
உனது சொந்த முக்திக்காக எல்லாவற்றையும் நீ துறந்துவிட விரும்பினால்.
அது அவ்வளவு ஒன்றும் பாராட்டுவதற்கு உரியதில்லை.
உலகத்தின் நன்மைக்காக உன் முக்தியையும் நீ தியாகம் செய்துவிட விரும்புகிறாயா ?
அப்படி நீ செய்தால் கடவுளாகவே ஆகிவிடுவாய்.
இதைச் சற்றுச் சிந்தித்துப் பார்.