ஒரு விதத்தில் பார்த்தால் மனிதனால் எதையும் முழுமையாய் அனுபவிக்க முடிவதில்லை
எதையும் முழுமையாய் அனுபவிக்கும் வித்தை ஏனோ
மனிதனுக்கு கைவர பெறவில்லை.
அது மண் ஆகட்டும், பெண் ஆகட்டும், பொன் ஆகட்டும்
எதையும் முழுமையாய் அனுபவிக்காததால்
அவனுக்கு எதுவும் முழுமையாய் தெரிவது இல்லை
அதனாலேயே ஜனன மரணங்களைப் பற்றிய புதிர்
இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
நாம் பிறவற்றை பற்றி அறியாமல் இருப்பது ஒன்றும்
மிகப் பெரிய தவறோ, இழிவோ அல்ல
ஆனால் தன்னை தான் அறியாமல் இருப்பத தான்
மிகப்பெரிய தவறு,
இழிவும் கூட.