இதை தான் பெரியவர்கள்
எதை, எதை எங்கெங்கு எப்படி வைக்க வேண்டுமோ
அப்படி வைக்கவேண்டும் என்றார்கள்
அவர்கள் சொன்னது புற பொருள்களை அல்ல
நம்மிடம் கருவியாய் உள்ள மனதையே சொன்னார்கள்
அது மட்டுமல்ல பெரியோர்கள் சொன்னது
மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்றார்கள்
இதில் உள்ள அர்த்தம்
மனமது நமக்கு ஏவளாளியாய் அடிமையாய் இருந்தால்
மந்திரம் ஜெபித்து நாம் பெற வேண்டியது எதுவும் இல்லை
நமக்கு வேண்டியது எல்லாம் இயல்பாகவே கிடைக்கும் என்பது தான்.
இதை பற்றிய விஷயங்களை
இதில் அனுபவம் உள்ளவரிடம் பணிந்து கேட்டுக் கொள்ளுங்கள் ,
இதை பற்றிய அறிவு உள்ளவரிடம் அல்ல.
கவனம்