அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர
வேறொன்றுமே நமக்குத்தேவையில்லை.
அன்புதான் வாழ்க்கையாகும்.
எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான்.
இந்த உண்மை
இம்மை மறுமையாகியஇரண்டு உலகங்களுக்கும் பொருந்தும்.
நன்மை செய்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை.
மற்றவர்களுக்கு நன்மை செய்யாமலிருப்பதுதான் மரணம்.
இப்போது நாம் பார்க்கிற மக்களில்
தொண்ணுறு சதவீதம் இறந்து போனவர்கள்.
அவர்கள் பிசாசுகள்தாம்.
எனது அருமைக் குழந்தைகளே,
அன்பு செலுத்துபவர்களைத் தவிர
வேறு யாரையும் வாழ்வதாகக் கருத முடியாது.