நான்கு விரல்களையும்
கட்டைவிரலோடு இணைத்து
குவித்து வைக்க வேண்டும்.
இதுவே முகுள முத்திரையாகும்.
பலன்கள்:-
மனம் சம்மந்தமான நோய்கள் குணமாகும்.
உடல் சோம்பலைப் போக்கி உடல் சுறுசுறுப்படையும்.
இந்த முத்திரையை நோய் பாதிக்கப்பட்ட இடத்தில்
அல்லது வலியுள்ள இடத்தில்
இம்முத்திரையை வைத்து கண்களை மூடி
பாதிக்கப்பட்ட இடத்தையே சிந்திக்க வேண்டும்.
மூச்சு ஒரே சீராக இருக்க வேண்டும்.
பத்து நிமிடம் முதல் 40 நிமிடம் வரை செய்யலாம்.
ஒரே நாளில் பலமுறை செய்யலாம்.
வலது கையில் மட்டுமே செய்ய வேண்டும்.
உடல் நிலை சரியில்லாதவர்கள் படுத்துக்கொண்டும் செய்யலாம்.
வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும்
நோய் மற்றும் வலி உள்ள இடத்தில்
இம்முத்திரையை வைத்து
நோயின் தீவிரத்தை குறைக்கலாம்.
மற்றவர்களூக்கு இம் முத்திரையை பயன்படுத்தும் போது
ஒரு பாத்திரத்தில் நீரை வைத்திருந்து
முத்திரையை செய்து முடித்ததும்
கைகளை அதில் நனைக்க வேண்டும்.