எண்ணம் கடந்த காலத்தை பற்றி இருந்து
நிகழ் கால நம்முடைய ஒவ்வொரு செயல்களிலும் அது நுழைந்து
நமக்கு பயம், பொறாமை, இன்பம், வருத்தம் போன்றவற்றை தந்து கொண்டேயிருக்கிறது.
அதனால், நாம் நம் நிலையை அறிந்து கொள்ள முடிவதில்லை.
இதிலிருந்து விடுபட என்ன வழி,
ஒரே வழி
எதை நாம் அனுபவிக்கின்றோமோ
அதை அப்போதே மறந்து விடுவது
இது கடினமாக தோன்றும் விஷயம்
ஆனால் நம்மை நாம் கவனிப்பதன் மூலம்
மிக எளிதாக கைவரக்கூடிய விஷயம்
இதை முயன்று பார்த்து வெற்றி அடையுங்கள்
வாழ்க்கை எதுவென்று புரியும்.
அப்படி புரியும் போது
நீங்கள் இயற்கையால்
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ஆவீர்கள்.