இந்த கடந்த காலம், எதிர்காலம் என்பது
எண்ணங்களால் ஆட்சி செய்யப்படுகிறது
இந்த எண்ணங்களே பயத்தை நம்முள் விடாமல் அழுத்தமாக பிடித்து வைத்திருக்கிறது.
இதை நாம் நன்றாக முதலில் புரிந்து கொள்வோம்
அடுத்ததாக
நமது வளர்ச்சிக்கும், இந்த எண்ணங்களே காரணமாயும் உதவி செய்வதாயும் இருக்கிறது.
இந்த விஷயத்தை நன்கு கவனித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நன்றாக இதை புரிந்து கொண்டபின்
எண்ணங்கள் என்பது என்ன என்ற வினாவை
நாம் முன் வைத்து சிந்தித்தால் வரும் பதில்
எண்ணம் என்பது ஞாபகத்தின் எதிரொலி
என்பது நமக்கு தெரியவரும்.
நமக்கு ஞாபகம் எதுவும் இல்லாவிடில்
நமக்கு எண்ணங்களும் இருக்காது.
எண்ணங்கள் இல்லாதபோது
பயமும் இருக்காது.
பயம் மட்டுமல்ல
நமக்கு வளர்ச்சியும் இருக்காது,