லோகாயதம் — சார்வாகர்கள் — நாத்திகம் 4
நம் புலன்கள் அறியாத காரணத்தால் தீர்மானமாக நாம் நம்பலாம் கடவுள் என்று ஒன்று இல்லையென்று.
கடவுள் இல்லையென்று ஆகிவிட்டதால் கர்மவினையும் இல்லை என்பதே இவர்கள் தத்துவம்
சுருக்கமாக சொன்னால்
பூதங்களின் இயல்பான குணவிசேஷத்தால் உள்ள கலப்புகளே பொருள்கள்
அந்த பொருள்களை காண முடியும்
உணர முடியும்
சில கால கட்டத்தில் இணைந்த பூதங்கள் பிரிந்து வேறாக மாறுகின்றன
இதில் மனிதனும் அடக்கம்
அதனால் மனிதன் அனுபவிக்க பிறந்துள்ளான்,
அனுபவிக்கிறான், இறக்கிறான் அத்தனை தான் இதில்
வேதம், கடவுள், சொர்கம், நரகம் என்பது எல்லாம் வீண் கற்பனை
பொய்யும் கூட
போகமே தத்துவமாக கொண்ட மதமே லோகாதாய மதம்.