எவ்வளவு காலம் இதற்குச் செலவழிக்க வேண்டும்?
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது இதில் ஈடுபடுதல் அவசியமாகும்.
எதிர்பாராத சம்பவங்கள் குறுக்கிட்டால் அரை மணி நேரமாவது பயிலலாம்.
எதற்குமே ஓய்வில்லாவிட்டால் கால்மணி நேரம் ஓய்வற்ற நாளிலும் இதற்குச் செலவிடலாம்.
தினம் தனுராசனம், பஸ்சிமோத்தானாசனம், ஹலாசனம், சர்வாங்காசனம்,
மத்ச்யாசனம், சிரசாசனம், அர்த்த மத்ச்யேந்த்ராசனம், பத்மாசனம்,
உட்டியாணா, நெளலி, சவாசனம், நாடி சுத்தி செய்ய வேண்டியது,
மற்றவைகளை ஓய்வுக்குகந்தவாறு இவைகளுள் கலந்து கொள்ளலாம்.