நோய் தடுக்க மேல் கூறப்பட்ட பலன்களைப் பெற்று வாழ
யோகாசனப் பிராணயாமத்தை எவ்வாறு உபயோகிக்க வேண்டும்?
இதற்கு தினசரித் திட்டம் என்ன?
எல்லோரும் எல்லாவற்றையும் செய்வது அவசியமா?
ஆனந்தரகஸ்ய நூலில் கூறிய ஆசனங்களில்
எவற்றைத் தினம் அவசியம் செய்ய வேண்டும்?
எவைகளை
இஷ்டம், காலம் , செளகரியத்திற்கொப்ப சேர்த்துக்கொள்ளலாம்.
ஒருவன் ஒரு வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது செய்யவேண்டும்.
ஒரு நாள் விடுமுறை எடுத்து
வாரத்தில் ஆறு நாட்கள் செய்தல் அதிகப்பலனைக் கொடுக்கும்.
நித்தியக் கடனாக உண்பது, உறங்குவது போல்
ஆசனப் பிராணயாமத்தை தினம் செய்து வாழ்தல் உத்தமமாகும்.