இங்கு எல்லாவற்றையும் என்று நான் சொல்லுவது
உன்னுடைய வாழ்க்கையை
அதன் அழகை அதன் உன்னதத்தை
சூரிய உதயம், அஸ்தமனம், நட்சத்திரங்கள் நிறைந்த இரவு வானம்,
தாமரையின் அழகு ரோஜாவின் வாசனை, வளர்ந்து தேயும் நிலவு,
ஆர்பரித்து ஓடும் ஆறு ஓ என்று ஒசையுடன் விழும் அருவி
உயர்ந்த சிகரங்களை கொண்ட மலை அதில் படர்ந்திருக்கும் பனி
இவைகளை ரசிக்க தெரிந்தால் உன் மனம் லேசாகிவிடும்.
பூரணம் அதில் நிரம்பி வழியும்
அப்போது நீ உண்மையிலேயே,
தாயை, தந்தையை, மனைவியை, குழந்தையை
பணம் என்ற சிந்தனை இல்லாமல் பார்ப்பாய்
ரசிப்பாய்
வாழ்க்கையை கணத்திற்க்கு கணம் வாழ்வாய்.