அன்பை அறிந்து கொண்டு அதில் திளைப்பவனுக்கு
பணத்தின் அருமை, பெருமை, அதிகாரத்தின் ஆற்றல் போன்றவை ஏனோ தெரிவதில்லை.
மக்கள் ( உலகோர் ) பார்வையில் கையாலாகதவனாக
எதிர்கால சிந்தனையற்றவனாக
பிழைக்கத் தெரியாத அறிவிலியாகவே தென்படுவான்.
உன்னை சுற்றி இருக்கின்ற நடக்கின்ற விஷயங்களை ரசித்து பழகினால்
ரசிப்பது எப்படி என்ற வித்தையை அதன் சூட்சுமத்தை அறிந்து கொண்டால்
நீ
பணத்தின் மீது உன்னுடைய எல்லாவற்றையும் இழக்கும் அளவுக்கு
மோகம் கொள்ளமாட்டாய்