சரீர ரக்ஷண உபதேசம்
முதலில் மனிதன் சகல கருமங்களைவிட்டு
சரீரத்தை பரிபாலிக்க வேண்டியது. அவசியமாக இருக்கிறது
சரீரமில்லாது சுபம், அசுபம், இல்லாமை இவைகள் எப்படி வாய்க்கும்.
சரீரத்தை பாதுகாக்க வேண்டிய முறை
பட்டணத்தை படைத்தவன் பட்டணத்தை எவ்விதம் பரிபாலிக்கிறானோ
அவ்விதம் மேதாவி ஆனவன் சரீரத்தை பாதுகாக்கவேண்டியது.
சரீரத்தை பாதுகாப்பவனது அகாலம் அகன்று
காலமென்கிற பராக்கிற உச்சாஹம்
இந்திரிய ஆயுர்பலம் முதலியவைகள் உண்டாகின்றது.