ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும்.
ஏளனம், எதிர்ப்பு பிறகு ஏற்றுக் கொள்ளப்படுதல்.
தனது காலத்தைவிட முற்போக்காகச் சிந்திக்கும்ஒவ்வொரு மனிதனும்
நிச்சயம் தவறாகவே புரிந்துகொள்ளப்படுவான்.
எனவேஎதிர்ப்பும், அடக்குமுறையும் வரவேற்கத் தக்கவையே.
ஆனால் நாம் மட்டும்உறுதியாகவும், துாய்மையாகவும்,
கடவுளிடம் அளவுகடந்த நம்பிக்கைஉடையவனாகவும் இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் இந்த இடைஞ்சல்கள்எல்லாம் மறைந்து போய்விடும்.