சண்டையிடுவதிலும், குறைசொல்லிக் கொண்டிருப்திலும் என்ன பயன் இருக்கிறது ?
நிலைமையைச் சீர்படுத்திக் அமைக்க அவை நமக்கு உதவப் போவதில்லை.
தான் செய்ய வேண்டிய கடமையாக அமையும் சிறிய வேலைகளுக்கு
முணுமுணுப்பவன் எல்லாவற்றுக்கும் முணுமுணுக்கவே செய்வான்.
எப்போதும்முணுமுணுத்தபடியே அவன் துன்பம் பொருந்திய வாழ்க்கை வாழ்வான்.
அவன்தொடுவது எல்லாமே தோல்வியில் முடியும்.
ஆனால் தன் கடமைகளைத் தவறாமல்ஒழுங்காகச் செய்து கொண்டு,
தன்னால் ஆனவரை வாழ்க்கையில் முயன்றுகொண்டிருப்பவன்
கட்டாயம் ஒளியைக் காண்பான்.
மேலும் மேலும் உயர்ந்தகடமைகள் அவனது பங்காக அவனைத் தேடித் தாமாக வந்து சேரும்
துாய்மை, பொறுமை, விடாமுயற்சி வெற்றிக்கு ஆதாரம் *
துாய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்குஇன்றியமையாதவையாகும்.
அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
தன்னுடைய சொந்த சுக வசதிகளை மட்டும் கவனித்துக்கொண்டு,
சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு
நரகத்திலுங்கூட இடம்கிடைக்காது