3 – க்குரியவர் ராகு சாரம் பெற்று 8, 12 – லிருந்து 8 – க்குரியவருடன் சேர்ந்திருந்தால்
மேற்படி கிரக தசாபுத்தி காலங்களில் உடன் பிறப்பு பிரிவினை, குடும்பம் பிரிந்து வாழுதல்
குடும்பத்தில் தற்கொலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
3 – இல் 7 – க்குரியவர், 3 – க்குரியவர் 12 – லிருந்து, 10 – க்குரியவர் சாரம் பெற்று இருந்தாலும்,
அக் கிரக சாரத்தை பெற்று கிரகத்தால் பார்க்கப்பட்டாலும்,
இளம் வயதிலேயே பெண் சுக போகங்களை அனுபவிப்பான்.
வீரிய பலம் மிகுந்த இவன் காம இச்சையானது
கண்ணுக்கு அழகான மனைவி இருந்தாலும்,
மற்றவர்கள் வெறுக்கக் கூடிய நிலையில் உள்ள பெண்களை கட்டியழுவான்.
3 – இல் குரு, சனி இருந்து, 8 – க்குடையோன் சாரம் பெற்று, யுத்தமாக இருந்தால்,
பிறக்கும் குழந்தைகள் இளம் வயதில் பாதிப்புக்கு உள்ளாகும்.
உடல் பாதிப்புகள் அங்கஹீனம் காணும்.
காம இச்சை அதிகம் உள்ளவன். இங்குள்ள கிரகங்கள் சுக்கிரன் சாரம் பெற்றால்,
காம வெறியால் தகாத செயல்களை எல்லாம் செய்வான்.