பணம் இருந்தால் வீடு வாங்கலாம் பயணிக்க கார் வாங்கலாம்
சமூகத்தில் அந்தஸ்தை அடையலாம். விமானத்தில் பறக்கலாம்
உயர்தர உணவகங்களில் உணவு அருந்தலாம்.
இவை எல்லாம் உனக்கு என்ன விதமான மாற்றங்களை தரும்
நீ இன்பமாயும், சந்தோஷமாயும் இருப்பதாய் தோன்றும்
ஆனால் அது எல்லாம் எத்தனை நேரம் எத்தனை நாள்
அதன் பிறகு உனக்குள் நீ ஒரு வெறுமையை உணருகிறாய்
இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதும் வெறுமையை உணருகிறாயே
ஏன் அப்படி உணருகிறாய்
காரணம் உனக்குள் நீ வெறுமையாய் இருப்பதால்
அந்த வெறுமையை பணம், அதிகாரம், வீடு, கார் என எதைக் கொண்டு நிரப்பினாலும்
மீண்டும் அது வெறுமையாகவே இருக்கிறது.
உன்னுடைய எண்ண ஓட்டத்தில்
எதிர்கால பயமும் வருவதே காரணம்