நிர்வாண ஊரில் கோவணாண்டி, பைத்தியக்காரன்,
துணி கட்டிக் கொள்ள இஷ்டப்பட்டாலும்,
நிர்வாண ஊரில், துணி கிடைத்தால் தானே!
கைக்குத்தல் அரிசி, தீட்டாத அரிசியை
இயற்கைக்குகந்தபடி உபயோகிக்க சிலர் விரும்பலாம்.
மந்திரியிலிருந்து மடப்பள்ளிக்காரன் வரையிலும்
தீட்டிய அரிசியைத் தின்று
சில கேடுகளை சம்பாதித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.